Skip to main content

கரோனாவில் இருந்து தப்பிக்க ஆடம்பர சொகுசு விடுதியை புக் செய்து பணிப்பெண்களுடன் தங்கியுள்ள தாய்லாந்து மன்னர்!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மனிதர்கள் இதில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாஸ்க், சானிடைசர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
 

jk



பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதுவும் தன்னுடைய மனைவி உள்ளிட்ட 20 பணிப்பெண்களுடன் அந்த ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். மேலும் யாரும் அந்த விடுதியில் அறை எடுத்து தங்கக் கூடாது என்பதற்காக அந்த ஹோட்டல் முழுவதையும் அவர் புக் செய்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 140 கோடிக்கு ஏலம் விடப்பட்ட திப்பு சுல்தானின் வாள்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

tipu sultan sword auction 140 crores in london 

 

திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஹைதர் அலி, தாயார் பாக்ர்-உன்-நிசா. திப்பு சுல்தான் 1782 இல் தன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னுடைய 32வது வயதில் சுல்தானாக அரியணை ஏறினார். அதன் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்து தொடர்ந்து போர் புரிந்தார் திப்பு சுல்தான். 1799 ஆம் ஆண்டு 4வது மைசூர் போரில் ஆங்கிலேயப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தார். மேலும் இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர்.

 

இந்நிலையில் திப்பு சுல்தான் பயன்படுத்தி வந்த வாள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் பான்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏலத்திற்கு வந்தது. அப்போது இந்த வாளை ஏலத்தில் எடுக்க இருவரிடையே கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த வாளானது ஏலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இது 7 மடங்கு அதிகமாக விலை போனது. இந்த வாள் 14 மில்லியன் பவுண்டுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

 

திப்பு சுல்தான் 4 ஆம் மைசூர் போரில் கொல்லப்பட்ட பிறகு இந்த வாள் இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் டேவிட் பயர்டுக்கு அவரது வீரத்துக்காக வழங்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. திப்பு சுல்தானின் வாள் ஏலம் விடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது. 

 

 

Next Story

“விஷ மோதிரத்தை வைத்து சவுதி மன்னரைக் கொல்ல சதி செய்த இளவரசர்”-பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

prince who conspired to made the Saudi king to passed away by poison ring

 

வளைகுடா நாடுகளுள் ஒன்றான சவுதியில் தற்போது மன்னராட்சி முறை நடந்து வருகிறது. அந்த நாட்டின் இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற நாளில் இருந்து அந்நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் மற்றொரு புறம் அவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பி வருகின்றன. அந்தவகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

 

எனினும் அந்த நாட்டு அரசு இதனைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த மன்னர் அப்துல்லாவை இளவரசர் பதவிக்காக, முகமது பின் சல்மான் கொலை செய்ய முயற்சி செய்தார் என அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கூறியிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் புலனாய்வு அதிகாரி அல்ஜாப்ரி, சவுதியில் இருந்து தப்பித்து கனடாவில் வசித்து வருகிறார். அவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகத்தில் அளித்துள்ள பேட்டியில், இளவரசர் குறித்து பல்வேறு கருத்துகளைத் துணிச்சலாகப் பகிர்ந்துள்ளார்.

 

நேர்காணலில் அவர் கூறியதாவது, “சவுதி இளவரசர் குறித்த பல ரகசியங்கள் என்னிடம் உள்ளது. மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை அதிகாரத்துக்காகக் கொல்ல இளவரசர் திட்டமிட்டார். இதற்காக ரஷ்யாவில் இருந்து விஷம் பொருத்தப்பட்ட மோதிரத்தை வாங்கினார். இதன் மூலம் கைக்குலுக்கி மன்னரைக் கொல்லவும் அவர் திட்டமிட்டிருந்தார். அந்த நேரத்தில் , இளவரசர் முகமது பின் சல்மான் எந்தவித அதிகாரத்திலும் இல்லை. எனினும் தனது தந்தையை அரியணையில் வைப்பதற்காக மன்னரைக் கொல்ல இவ்வாறான திட்டங்களைத் தீட்டினார். இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார்” எனக் கூறினார்.