Skip to main content

காரின் மீது அமர்ந்த யானை... அலறியடித்து காருடன் ஓடிய ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

வனப்பகுதி வழியே சென்ற கார் ஒன்றின் மீது யானை அமர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

thailand elephant sits on car

 

 

தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்கா வழியாக செல்லும் சாலையில் ஓட்டுநர் ஒருவர் தனது காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த காரை யானை ஒன்று வழிமறித்துள்ளது. டியூவா என்ற அந்த 35 வயது ஆண் யானை, சிறிது நேரம் காரை நகர விடாமல் மறித்து நின்றுள்ளது. பின்னர் காரின் மீது ஏற அந்த யானை முயன்றுள்ளது. இதனால் பீதியடைந்த அந்த ஓட்டுநர் தனது காரை நகர்த்த முயற்சி செய்துள்ளார். ஆனால் யானை தனது முழு உடலையும் காரின் மீது வைத்து அதன் மேல் ஏறி அமர்ந்துள்ளது.

காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை யானையின் எடை தாங்காமல் நசுங்க ஆரம்பித்துள்ளன. காரின் மேல் யானை இருக்கும் போது சட்டென சுதாரித்த ஓட்டுநர் பதறியடித்தபடி அங்கிருந்த தனது காரை எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாய்லாந்தில் சிக்கியிருக்கும் மற்ற தமிழர்களையும் மீட்கும் பொறுப்பை அரசு  ஏற்கும்” - அமைச்சர் மஸ்தான் 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Government will accept the responsibility of rescuing other Tamils ​​trapped in Thailand" - Minister Mastan

 

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து நாட்டில் பணி செய்ய சென்றனர். அங்கிருந்து அவர்கள் முறைகேடாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி செய்ய மறுத்தால் அந்த கடத்தல் கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து சென்ற 300 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 பேர் இருந்தனர். 

 

தமிழர்கள் மியான்மரில் சிக்கி தவிக்கும் விவகாரத்தை அறிந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்தது. 

 

இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவித்திருந்த 13 தமிழர்கள்,  நேற்று தாயகம் திரும்புகின்றனர். 13 தமிழர்களும் ஹாங்காங்-லிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.  அவர்களை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்து நாட்டில் வேலை என கூறி பல்வேறு ஏஜண்ட்கள் மூலம் அங்கு சென்ற தமிழர்கள் பலர் தாய்லாந்தின் பக்கத்து நாடான மியான்மரில், சொன்ன வேலையை தவிர்த்து வேறு வேலைகள் வழங்கியுள்ளனர். அதனை இவர்கள் செய்ய மறுத்தபோது பல்வேறு இன்னல்களை சந்தித்து, அங்கு சிக்கி தவித்துள்ளனர். 

 

இந்தத் தகவலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் தகவலை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்மூலம், இந்த 13 நபர்களும் தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தாய்லாந்திலிருந்து தமிழ்நாடு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுகொண்டது. இன்னும் பல பேர் அங்கு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்களையும் அழைத்து வரும் பொறுப்பை அரசு ஏற்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 


 

Next Story

“மியான்மரில் சிக்கியவர்கள் நிச்சயம் மீட்கப்படுவர்” - தமிழிசை சௌந்தர்ராஜன்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

"Those trapped in Thailand will surely be rescued" - Tamilisai Soundarrajan

 

தாய்லாந்து நாட்டில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு நாடு திரும்ப முடியாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர். 

 

ஐடி நிறுவனங்களில் பணி எனக் கூறி இடைத் தரகர்களிடம் பணம் செலுத்திய தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலர் கடந்த மே மாதம் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டேட்டா பதிவிற்கான பணிக்காக அழைத்து செல்லப்பட்ட அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி மியான்மருக்கு மர்ம நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மோசடி தொழில் செய்ய வற்புறுத்துவதாகவும் சம்மதிக்கவில்லை எனில் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். 

 

இதனை அடுத்து மியான்மரில் சிக்கிய இந்தியர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “நிச்சயமாக அவர்கள் மீட்டெடுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மிக பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்க என்ன வழிமுறைகள் தேவையோ அனைத்தும் மேற்கொள்ளப்படும். மிக விரைவில் அவர்களை இந்தியாவிற்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நிச்சயமாக தொடர்பு கொண்டு இந்த காட்சிகளை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.