tt

தாய்லாந்தில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்தும் ஜனநாயக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் போரட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். அதனை தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் அடுத்த மாதம் 24-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனும் அறிவிப்பும் வந்தது.

Advertisment

இந்நிலையில் தாய் ரக்‌ஷா சார்ட் எனும் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு தாய்லாந்து இளவரசி உபோல்ரதானா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்தார். ஆனால் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிட, மன்னரும் அவரது சகோதரருமான மகா வஜிரலோங்கோர்ன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது, பொருத்தமற்றது எனத் தொடர்ந்து கூறிவந்தார்.

Advertisment

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல்ரதானா பெயரை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளது. மேலும் அவரின் பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.