ஓடும் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 65 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

tezgam express fire accident update

பாகிஸ்தானின் கராச்சி - ராவல்பிண்டிக்கு இடையே இயக்கப்படும் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல கராச்சியில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள லியாகத்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென அருகிலிருந்த பெட்டிகளுக்கு பரவ ஆரம்பித்தது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், மூன்று பெட்டிகள் முற்றிலும் எரிந்தன.

இந்தநிலையில், இதில் பயணம் செய்த 65 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் லியாகத்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைநடத்திவரும் போலீசார், உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சிறியவகை கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.