அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பஸோ (EL PASO) எனும் இடத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கையில் துப்பாக்கியுடன் வணிக வளாகத்திற்குள் நுழைந்த அந்த நபர் திடீரெனஅங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டுள்ளான். அப்போது, பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையிலும், இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக21 வயதான நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.