Skip to main content

நாட்டு நாட்டு பாடலுக்கு மரியாதை செலுத்திய டெஸ்லா

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Tesla pays tribute to naattu naattu song

 

முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மொழிப் படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் விருது வாங்கியது. இதனால் இரண்டு படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்து மரியாதை செலுத்தியுள்ளது. தற்பொழுது அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்தியா மற்றும் பூட்டான் ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மென் மற்றும் அவரது தூதரக குழுவினர் இப்பாடலை ஒலிக்கச் செய்து நடனமாடிய காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எலான் மஸ்க் அறிமுகம் செய்த ரோபோவில் இந்தியன் டச்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Indian Touch in Elon Musk Launched Robot

 

டெஸ்லா விண்வெளி நிறுவனத்தின் உரிமையாளரும், அண்மையில் ட்விட்டர் வலைத்தளத்தை விலை கொடுத்து வாங்கி அதை நினைத்தபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருப்பவருமான எலான் மஸ்க் தற்போது மனித வடிவம் கொண்ட ரோபோக்களை வெளியிட்டுள்ளார்.

 

டெஸ்லா நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் 'டெஸ்லா ஆப்டிமஸ்' என்ற மனித வடிவிலான ரோபோக்களை பற்றிய செயல்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு அடி அங்குலம் உயரம் கொண்ட மனித வடிவிலான இந்த ரோபோக்கள் 56 கிலோ எடை கொண்டது. இவை கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கிறது.

 

பல்வேறு உலக நாடுகளின் சிறு சிறு அம்சங்களும் இந்த ரோபோக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் டச் ஆக இந்த ரோபோவில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 'நமஸ்தே' என்றால் 'வணக்கம்' வைக்கவும், நடராஜா ஆசனா, விருட்சாசனா ஆகிய இரண்டு ஆசனங்களையும் செய்து காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை தற்பொழுது டெஸ்லா அறிமுகப்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மனிதர்கள் ஒரே விதமான போர் அடிக்கும் வேலையைச் செய்வதைத் தவிர்க்கவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து உரையாடிய பிரதமர்!

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

pm modi  met the pomman Belli couple

 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பின் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர். 

 

அதன்பிறகு மைசூர் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை பந்திப்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிறகு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்தார். பின்னர் யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்ததோடு யானைகளின் பாகன்களை சந்தித்து உரையாடினார். பின்பு இங்கு வர முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து பாராட்டி அவர்களிடம் உரையாடிவிட்டு சாலை மார்க்கமாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு காரில் சென்று பின்பு அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார்.