/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kenya-std.jpg)
கென்ய தலைநகர் நைரோபியில் இன்று காலை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் மீது திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் மூலம் 4 பேர் கொண்ட தீவிரவாத குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் 9 மணிநேர சண்டைக்கு பின்நிலைமை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கென்யா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)