dfgdfgg

Advertisment

காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் அதே போன்ற ஒரு தீவிரவாத தாக்குதல் தற்போது ஆப்கானிஸ்தான் நடந்துள்ளது. தாலிபான் இயக்கம் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் தாலிபான்கள் தற்போது நடத்தியுள்ள இந்த தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 23 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், 15 வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.