Advertisment

ஜப்பானில் சுனாமி தாக்கியதால் பதற்றம்!

Tension in Japan due to tsunami

Advertisment

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத்தொடர்ந்து,சுனாமி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்துசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 90 நிமிடங்களில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்குவிடுக்கப்பட்டுள்ளது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும்இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத்தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

earthquake Japan tsunami
இதையும் படியுங்கள்
Subscribe