temple crown gifted by Prime Minister Modi was stolen

பிரதமர் மோடி காணிக்கையாக வழங்கிய கிரீடம் திருடு போயுள்ள சம்பவம் வங்க தேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வங்க தேசத்தில் சத்திரா பகுதியில் பிரசித்திபெற்ற ஜெசோரேஷ்வரி காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜெசோரேஷ்வரி காளி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்குச் சாமி தரிசனம் செய்த அவர், தங்க மூழாம் பூசிய வெள்ளி கிரீடத்தை காணிக்கையாகக் கோவிலுக்கு வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில் ஜெசோரேஷ்வரி காளி அம்மன் கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.