Advertisment

டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இந்திய இளைஞர்... காரணம்..?

தெலுங்கானா மாநிலத்தின் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்ற இளைஞர் தனது வீட்டின் முன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை வைத்து அதற்கு பூஜைகள் செய்து வருகிறார்.

Advertisment

telangana man  installed a life size statue of the US President Donald Trump

கடந்த 14ஆம் தேதி டிரம்பின் பிறந்தநாளை முன்னிட்டு டிரம்ப் சிலையை நிறுவி அதற்கு பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், "டிரம்ப்பை எனக்கு பிடிக்கும். அதனால் தான் சிலை வைத்துள்ளேன். அவருக்கு தினமும் பூஜைகளும் செய்வேன்" என கூறியுள்ளார்.

தினமும் டிரம்புக்கு அவர் பூஜை செய்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஏற்கனவே கடந்த 2016 ல் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற இந்தியாவில் சில வலதுசாரி அமைப்புகள்பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

telangana trump weird
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe