பற்றி எரியும் டெஹ்ரான்- இந்திய வெளியுறவுத்துறை அவசர அறிவிப்பு

Tehran on fire - Indian Ministry of External Affairs issues emergency declaration

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 78 உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் குறிவைத்து நடத்திய தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியானது.மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெஹ்ரானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவு சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையானது திறக்கப்பட்டு அவசரஉதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.1800118797, 91-11-23012113, 91-11-23014104, 91-11-23017905, 91-9968291988, +989128109115, +989128109109

India iran israel
இதையும் படியுங்கள்
Subscribe