நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 19 வயது பெண்ணை கத்தியால் வயிற்றில் குத்தி, கிழித்து குழந்தையை எடுத்தசம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

teen girl baby missing case in chicago

அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த மார்லன் ஓச்சோ என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தனது காரில் வெளியே சென்றுள்ளார். அதன்பின் இரவு வரை அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் அவரது போனில் இருந்து 'என்னால் இப்போதைக்கு வர முடியாது' என குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது. இதனையடுத்து அடுத்த நாளும் அந்த பெண் வீட்டிற்கு வராத நிலையில் கவலையடைந்த பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே 46 வயதான கிலாரிஸ் என்ற பெண் தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் மருத்துவ பரிசோதனையின் போது அவரது ரத்தம் மற்றும் டி.என்.ஏ பொருந்தாததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை விசாரித்த போது அது தன்னுடைய குழந்தை இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார் அந்த பெண்.

மேற்கொண்டு விசாரணையின் போது அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்த போது அந்த பெண் வீட்டின் பின்பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடைத்துள்ளது. அதனை சோதனை செய்து பார்த்ததில் அது ஏப்ரல் மாதம் காணாமல் போன 19 வயதான மார்லன் ஓச்சோவின் சடலம் என தெரிய வந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேஸ்புக் மூலம் மார்லன் ஓச்சோவிடம் பேசி குழந்தைக்கான ஆடைகள் தருவதாக கூறி வரவைத்து அவரை அடைத்து வைத்துள்ளனர். பிறகு சில நாட்கள் கழித்து மார்லன் ஓச்சோவின் கழுத்தை நெரித்து கொன்று அவரது வயிற்றிற்குள் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் என தெரிய வந்தது.

Advertisment

இது தொடர்பாக அந்த பெண், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் கணவர், மகள், மகளின் ஆண் நண்பன் என 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 19 வயதான இளம் பெண் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.