Advertisment

23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்த மழலையர்பள்ளி ஆசிரியை...

சீனாவில் ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் குழந்தைகளுக்கு விஷ உணவை கொடுத்த வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

teacher gave poisoned food to students at kindergarten school in china

குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் நைட்ரேட் விஷம் கலந்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிண்டர்கார்டன் வந்த குழந்தைகள் மாலை மீண்டும் வீடுதிரும்பியவுடன் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அக்குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட கஞ்சியில் நைட்ரேட் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இறைச்சி பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் எப்படி கஞ்சியில் கலந்தது என அதனை கொடுத்த ஆசிரியையிடம்விசாரணை நடந்தப்பட்டது.இதைத் தொடர்ந்துபள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும், அதில்அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

Advertisment

china
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe