tt

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் விற்பனையில் 12% சரிவை சந்தித்துள்ளதென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதில் அந்நிறுவனத்தின் உயர்ரக வாகனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகளவில் 1,00,572 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றும் இதே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் 1,14,797 எனும் அளவில் விற்பனையானது என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல் பயணிகள் வாகனங்களும் 15 சதவீதமும், வணிகரீதியான வாகனங்கள் 9 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த வாரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டின் வரவு செலவு கணக்கை பதிவு செய்தது. அதில் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டில் ரூ. 26,961 கோடி நஷ்டம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அந்நிறுவனம் மற்றொரு சரிவை சந்தித்துள்ளது.