style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு வரவு மற்றும் செலவு கணக்கை பதிவு செய்தது. அதில் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டில் ரூ. 26,961 கோடி நஷ்டம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக தனது நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்கள் லண்டன் மற்றும் வட அமெரிக்க நாடுகளில் நல்ல விற்பனையை கொடுத்தாலும் சீனாவில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை அது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என அந்நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.