Advertisment

கோவையில் விடிய விடிய மது அருந்திய மூவர் உயிரிழப்பு!

tasmac incident in kovai

Advertisment

கோவையில் விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் தீபாவளியைக் கொண்டாட விடிய விடிய மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களைக் கைப்பற்றி போலீசார் இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு முழுவதும் மது அருந்திய மூன்று பேரும் காலையில் டாஸ்மாக் கடையில் பிளாக்கில் மீண்டும் மது வாங்கி அருந்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து சாலையில் மயங்கி விழுந்த 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.இந்த தொடர்உயிரிழப்புஅங்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

diwali incident kovai police
இதையும் படியுங்கள்
Subscribe