Skip to main content

உயிருடன் இருக்கும் போதே வெட்டி எடுக்கப்படும் உறுப்புகள்... நோயுடன் போராடும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரம்...

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

அல்பினிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை வீடுகளில் வைத்திருந்தால் பணம் கொட்டும், விரைவில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்கிற மூட நம்பிக்கையால், அவர்களின் கைகள், விரல்கள், கால்கள் என ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி விலையுடன் விற்கப்படும் சம்பவம் தான்சானியா நாட்டில் நடந்து வருகிறது.

 

tanzania albinism patient

 

 

அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நோயுடன் போராடுவதை காட்டிலும், உறுப்பு திருட்டிலிருந்து தப்பிப்பதற்கான போராட்டமே அந்நாட்டில் மேலோங்கி காணப்படுகிறது. இந்த மூடநம்பிக்கை அந்நாட்டில் அதிகரித்துவரும் வேளையில், இதற்கான கருப்பு சந்தையும் அங்கு உருவாக்கி வருகிறது.

அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறுப்புகளுக்காக பலர் அலையும் நிலையில், நோய் பாதித்தவர்களின் உறவினர்களே பணத்திற்காக இந்த நோயாளிகளை கடத்தி உறுப்புகளை விற்கின்றனர். கைகள், விரல்கள், கால்கள் என ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவர்களும் அந்நாட்டில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இந்த உறுப்பு திருட்டு தற்போது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ள நிலையில், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தரையிறங்கும் போது ஏரிக்குள் விழுந்த விமானம்; 19 பேர் பலி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

The plane fell into the lake while landing in Bukoba!

 

தான்சானியா நாட்டின் பெரிய நகரமான டார் எஸ் சலாமில் இருந்து 43 பயணிகளுடன் சென்ற விமானம் புகோபாவில் தரையிறங்க முயன்ற போது, விக்டோரியா ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

 

முதற்கட்டமாக 20- க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விமானத்தைத் தரையிறக்கும் போது கோளாறு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

மிக வேகமாக வீசிய காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

 

 

Next Story

வீட்டோவை பயன்படுத்திய ரஷ்யா - பொதுச்சபைக்கு நகரும் நாடுகள்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

unsc

 

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

இதனையடுத்து ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஒரு கூட்டறிகையை வெளியிட்டுள்ளன. அதில், இந்த விவகாரத்தை ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் செயல்படாத ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு எடுத்து செல்லப்போவதாக தெரிவித்துள்ளன. மேலும் உலக நாடுகள், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து ரஷ்யாவை பொறுப்பாளியாக்கும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லை சாவடிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமால், யாரும் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மேற்கு உக்ரைன் நகரங்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இருப்பது, எல்லை பகுதிகளுக்கு வருவதைவிட பாதுகாப்பானது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம், கிழக்கு உக்ரைனில் இருப்பவர்கள் அடுத்த கட்ட அறிவுறுத்தல் வரும்வரை தற்போது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.