Skip to main content

பாதுகாப்புத்துறையை தமிழ் வம்சாவளி பெண்ணிடம் ஒப்படைத்த கனடா பிரதமர்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

ANITA ANAND

 

கனடாவில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமர் ஆனார். ஆனால் அதேநேரத்தில் முக்கியமான சட்டங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனே நிறைவேற்றும் நிலை லிபரல் கட்சிக்கு ஏற்பட்டது.

 

இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ, ஆட்சியைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்தார். இந்தத் தேர்தலிலும் லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் லிபரல் கட்சி மீண்டும் கூட்டணி அமைத்தது. இதனையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அவரது தலைமையில் அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

 

இந்தநிலையில், தற்போது  ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார். அதன்படி அனிதா ஆனந்த் என்ற நாடாளுமன்ற உறுப்பினரை ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளார். கார்ப்பரேட் வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள்.

 

பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தைப் போலவே கனடாவிலும் அமல்படுத்தப்பட்ட திட்டம்; குவியும் பாராட்டுகள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ 2 ஆம் தேதி டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டு சேர்வதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், அவர்கள் கற்றுக்கொள்ளவும், வளரவும், அவர்களின் முழு திறனை அடையவும் இந்த மதிய உணவு திட்டம் உதவுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு தலைமுறை முதலீடாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதை உறுதிசெய்ய, மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும். உணவுக்கான அணுகல் பற்றாக்குறை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இன மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகளை விகிதாச்சாரமாக பாதிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வளரும் குழந்தைகளின் தட்டுகளில் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது, பொருளாதாரத்திற்கும் நல்லது. இது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அதே வேளையில், குடும்பங்களின் அழுத்தத்தைக் குறைத்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாக முதலீடு செய்ய உதவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டு வந்தது. அதன்படி, இந்தத் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கனடா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், இது போன்று உணவு திட்டங்கள் கொண்டு வருவதில் இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே தமிழ்நாடு முன் மாதிரி என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சிலர் திராவிட மாடல் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் பாலோ செய்ய மட்டும் அல்ல. உலகிற்கே வழி காட்டுவது எனவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.