Skip to main content

“அடுத்த நிமிஷம் என்ன ஆகும்னு தெரியாது” - இஸ்ரேல் போர் குறித்து தமிழக மாணவி

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Tamil Nadu student says about Israel war

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. 

 

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன. இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாலும், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதாலும் ஜெருசலேம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் முடுக்கி விட்டுள்ளன. 

 

அந்த வகையில் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தது. இந்தியா வந்த 212 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர். எஞ்சிய 7 பேர் டெல்லியில் இருந்து நேராக கோவை வந்தடைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 

 

அதில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசியதாவது, “எனது பெயர் ராஜலெஷ்மி. பி.ஹெச்டி படிப்பிற்காக இஸ்ரேலிற்கு சென்றிருந்தேன். அங்கு இருக்கும் போது பயம் இருந்தது உண்மைதான். ஆனால், பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் வந்தது இல்லை. முக்கியமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு தருகிறார்கள். அதற்கு இஸ்ரேல் அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு அப்ளிகேஷன் இருக்கிறது. ஒரு ஏவுகணை வருகிறது என்றால், அந்த அப்ளிகேஷன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதை வைத்து நாங்கள் பதுங்கு குழியில் தங்கிக் கொள்வோம். 

 

நாங்கள் இருந்த பதுங்கு குழியே இரும்பால் சுற்றி மூடப்பட்டிருக்கும். அதனால், எந்தவித பிரச்சனையும் இருந்தது இல்லை. நிலைமை சரியானவுடன் தகவல் தெரிவிக்கப்படும். அதை அறிந்து கொண்டு நாங்கள் வெளியே வருவோம். இருந்தாலும், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. இதுவரை பல முறை ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியிருந்தாலும் யாரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தது இல்லை.  

 

ஆனால் ஹமாஸ் படையினர் உள்ளே வந்ததால் தான் நிறைய பாதிப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹஸ்புல்லா பயங்கரவாத குழுவும் உள்ளே வந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகும் என்று கருதப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு இது சாதாரணமாக இருந்தது. ஆனால், பழக்கம் இல்லாத எங்களைப் போல் வெளிநாட்டவர்களுக்கு பயம் இருந்தது தான். இதுவரை தண்ணீர், மின்சாரம் எதையும் தடை செய்யவில்லை. ஆனால், கூடிய விரைவில் தடை செய்யப்படலாம் என்று கூறியிருக்கிறார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்கள் முதல் 100 நாள் பணியாளர்கள் வரை..; ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Lakhs of people read book in Pudukottai from students to 100 day workers

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா நடத்த ஆயத்தமாகி வருகிறது.

புதுக்கோட்டை 7 ஆவது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 27 ஆம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் கண்காட்சிகள், கவியரங்கம், கருத்தரங்கங்களும் நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

புத்தகத் திருவிழாவை மாவட்ட மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், "வாசித்தலை நேசிக்க வேண்டும்" என்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற தலைப்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்க, அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வாசிப்பை நேசிக்கும் புத்தகப் பிரியர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வேலை நடக்கும் குளக்கரைகளில் நூறு நாள் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் லட்சம் பேர் வாசித்தனர்.

நூறு நாள் பணியாளர்களும் வேலைத்தலங்ளில் வாசிப்பதைப் பார்த்ததும் சில மூதாட்டிகள் "இதைப் பாக்கும் போது அறிவொளியில் பேரெழுத கத்துக்கிட்டது ஞாபகம் வருதுய்யா" என்றது நெகிழ வைத்தது.

Next Story

இரவு பகலாகச் சித்ரவதை அனுபவிக்கும் பாலஸ்தீன கைதிகள்; இஸ்ரேல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Palestinian prisoners are tortured day and night in Israel  jails

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 37 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திகொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகள் இரவு பகல் பாராது தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா 8 மாத காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், “இஸ்ரேலிய சிறையில் இரவு பகலாக சித்ரவதைக்கு பாலஸ்தீன கைதிகள் உள்ளாக்கப்படுகின்றனர். பல கைதிகள் விசாரணையில் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேலிய மருத்துவர்களும், செவிலியர்களும் கைதிகளை அடித்து கொடுமைப் படுத்துகின்றனர். சாப்பிடுவதற்கு சரியான உணவு பொருட்கள் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ரொட்டிக்கு மேல் சாப்பிடவில்லை. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீன கைதிகளை உயிரற்ற பொருளாகவே பார்க்கின்றனர்” என்று கண்கலங்கினார்.