Advertisment

இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தமிழ் நடிகை...

கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Advertisment

Tamil actress who survived from the srilanka bomb blast

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கொழும்பு சென்றிருந்த ராதிகா சரத்குமார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “சின்னமான் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.

bomb blast Colombo srilanka
இதையும் படியுங்கள்
Subscribe