Skip to main content

''பெண் குழந்தைகள் படிக்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்''-மலாலா கருத்து

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

"The Taliban should allow girls to study," she said-malala speech

 

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மலாலா ''பெண் குழந்தைகள் கல்வி அறிவை பெறுவதற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்'' என்றார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மலாலா மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமுற்ற மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். அதனையடுத்து மலாலாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்கள் அழகு நிலையத்திற்குத் தடை விதித்த நாடு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

nn

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்த நாட்டில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பூங்கா, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களிலும் பணியாற்ற தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

 

பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பணிக்குச் செல்லக் கூடாது. ஆண் துணையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. இவற்றை மீறினால் மரண தண்டனை கூட வழங்கப்படும். கடந்த முறை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது, பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் இவை. இம்முறை பெண்களுக்கு சில சுதந்திரங்களை வழங்கப்போவதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அது வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு வாய் மொழியாகத் தடை விதித்த தாலிபான் அரசு பெண்கள் அழகு நிலையங்களின் உரிமையை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

 

 

Next Story

"இந்தியாவிற்கே புரட்சிகரமான திட்டம்" - தமிழக முதல்வருக்கு கெஜ்ரிவால் வாழ்த்து 

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

"Revolutionary project for India" - Kejriwal congratulates Tamil Nadu Chief Minister

 

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய்  வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. மாதிரி பள்ளிகள் மற்றும் சீர்மிகு பள்ளிகள் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிகழ்வில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஒரு மாணவி தன்னுடைய உயர்கல்வியை தொடர அரசு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதால் மாணவிகள் தங்களது  உயர்கல்வியை தொடராமல் பள்ளி வகுப்பிலேயே நிற்பது குறையும் என்றும் சிறுவயதில் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்  குறையும் என்றும் கூறியுள்ளார். 

 

மேலும் "ஒரு மாநில முதல்வர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளி மருத்துவமனைகளை பார்வையிடுவதை இது வரை கண்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் டெல்லி வந்து பார்வையிட்டு தமிழகத்திலும் இதே போல் அமைப்பேன் என கூறி தற்போது செய்து காட்டியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" எனவும் கூறியுள்ளார். 

 

இந்த திட்டத்தை நாடே மிக கவனமாக பார்த்துக்கொண்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே மிகவும் புரட்சிகரமான திட்டம் என கூறியுள்ள அவர்  இந்தியா எங்கும் ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களின் அரசு பள்ளிகளின் நிலையும் அவை செயல்படும் விதமும் கவலை அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அரசுப்பள்ளிகளின் தற்போதைய நிலையை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.