2016ஆம் ஆண்டு காபூலில் இரு அயல்நாட்டுப் பேராசிரியர்களை தாலிபன் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். மூன்று ஆண்டுகளாக தாலிபன்களால் சிறை வைக்கப்பட்டிருந்த அவர்கள் விடுதலை பெற்றுவிட்டனர். மூன்று ஆண்டுகளாக தாலிபன்களால் சிறை வைக்கப்பட்டிருந்த கெவின் கிங் (அமெரிக்கா) மற்றும் டிமோதி வீக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் விடுதலை பெற்றுவிட்டனர் என அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு பஹ்ரைனில் அனஸ் ஹக்கானி என்ற தாலிபன் கைது செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு ஆப்கன் அரசு மரண தண்டனை விதித்தது. ஆனால் எப்போது அது நிறைவேற்றப்படும் எனக் கூறப்படவில்லை. ஹக்கானி கைதுக்கு பழிவாக்கும் விதமாக 2016ஆம் ஆண்டு காபூலில் இரு அயல்நாட்டுப் பேராசிரியர்களை தாலிபன் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். மூன்று ஆண்டுகளாக அவர்களுடைய பிடியில் உள்ள இருவரையும் மீட்பதற்காக ஆப்கன் அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது அனஸ் ஹக்கானி உள்ளிட்ட மூன்று தாலிபன்களை ஆப்கன் அரசு சில நாட்களுக்கு முன் விடுவித்தது. இதை தொடர்ந்து கடத்தப்பட்ட பேராசிரியர்களை தாலிபான்கள் விடுவித்தனர்.