Advertisment

tal

ஆப்கானிஸ்தானின் குஷிண்டா மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். இது குறித்து பேட்டி அளித்துள்ள குஷிண்டா ஆளுநரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் பெண்கள் உட்பட 25 பேர் தாலிபான்களால் கடத்தப்பட்டு, பின் பெண்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் மீதமுள்ள ஆண்களை அவர்கள் விடுவிப்பார்களா என்பதில் குழப்பம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.