Advertisment

அதிகார மோதலில் கொல்லப்பட்டாரா இடைக்கால அரசின் துணை பிரதமர்? - மறுக்கும் தலிபான்கள்!

abdul ghani baradar

ஆப்கானிஸ்தானில் தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ள தலிபான்கள்,முகமது ஹசன் அகுந்த்தைஆப்கான் பிரதமராகவும், தங்கள் இயக்கத்தின் இணை நிறுவனர்முல்லா அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் அறிவித்தனர். இதற்கிடையேதலிபான்களுக்கும், தனி குழுவாக இருந்து பின்னர் தலிபான்களுடன் இணைந்தஹக்கானி நெட்வொர்க்கிற்கும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாகக்கூறப்பட்டது.

Advertisment

இந்தநிலையில்முல்லா அப்துல் கனி பராதருக்கும், ஹக்கானி நெட்வொர்க்கிற்கும்மோதல் நடைபெற்றதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது தலிபான்கள் மறுத்துள்ளனர். தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தான் இறந்துவிட்டதாக வெளியான தகவலைமறுத்துஅப்துல் கனி பராதரேஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் தலிபான்கள், அப்துல் கனி பராதர் காந்தகாரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருப்பது போல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் எந்தசர்வதேச ஊடகத்தாலும் அந்த விடீயோவின்உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.

abdul ghani baradar afghanistan taliban
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe