ADVERTISEMENT

அனையாவிளக்கு தயாரித்து அசத்தல் செய்த சுவாமிமலை சிற்பிகள் 

12:24 AM Jun 16, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட 50லிட்டர் கொள்ளவு கொண்ட வெங்கலத்தால் ஆன அணையா விளக்குவடிமைக்கப்பட்டுள்ளது. அதனை நாளை மறுநாள் அனுப்ப உள்ளனர்.

ADVERTISEMENT

சுவாமிசிலைகள், தலைவர்களின் சிலைகள், விளக்குள், என வெண்களத்தாலும், மெட்டல்களாலும் செய்து உள்ளுர், மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றனர் சுவாமிமலை சிற்பக்கலைஞர்கள், எழுபதுக்கும் அதிகமான சிற்பக்கூடங்களும் நூற்றுக்கும் அதிகமான சிற்பிக்களும் சுவாமிமலைப்பகுதிகளில் இருந்து வடிவமைத்து கொடுக்கின்றனர்.

அந்த வகையில் மலேசியா நாட்டில் உள்ள பத்துமலைமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. அந்த கோயில் கும்பாபிஷேகத்தின் போது கோயிலின் எதிரேஅணையாவிளக்கு அமைக்க, அந்நாட்டைச்சேர்ந்த பக்தர் சாமுவேல் சண்முகநாதன் என்பவர் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள ஜெயம் சிற்ப கூடத்தில் அணையா விளக்குவடிவமைத்து தரும்டி கோரியிருந்தனர்.

அதன்படி சிற்ப கூட ஸ்தபதிகள் 3 அடிஉயரத்தில் 160 கிலோ எடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் வெங்கலத்தால் அணையா விளக்கைவடிவமைத்தனர். அனைையா விளக்கு தயாரித்திருப்பது இதுவேே முதல் முறை என பெறுமைக்கொள் கிறார்கள் சிற்பிகள்.

ஜெயம் சிற்பக்கலைக்கூட கலைஞர்கள் கூறுகையில், எவ்வளவோ விதவிதமான சிலைகளை வடிவமைத்திருக்கிறோம், ஆனால் அனையா விளக்கு செய்து கேட்டபோது சற்று தயங்கினோம், செய்திட முடியுமா என்கிற அய்யமும் ஏற்பட்டது, பிறகு எங்களுக்கு கிடைத்த மண்ணின் மீது நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்டு வெற்றிகண்டோம், சிலை செய்வதற்கு தகுந்த மண் மிகவும் முக்கியம், அது எங்களுக்கு காவிரியில் கிடைப்பது தான் அதிர்ஷ்டம், அபூர்வம், வரப்பிரசாதம், அது கிடைக்கும் வரை எங்களின் திறமை மெருகேறும்."என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT