Advertisment

ஏலத்தில் சாதனை படைத்த சூப்பர் மேரியோ...

super mario bros auctioned for a whooping price

Advertisment

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் மேரியோ கேம் பிரதிஒன்று ரூ. 85 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் மிகப்பிடித்தமான மற்றும் பிரபலமான கேம்களின் ஒன்று சூப்பர் மேரியோ. 3டி, வி.ஆர், ஏ.ஆர் என கேம்களின் பரிணாமம் மிகப்பெரிய வளர்ச்சியைத் தற்போது சந்தித்திருந்தாலும், சூப்பர் மேரியோ கேம் இன்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூப்பர் மேரியோ கேம் பிரதியை அமெரிக்காவில் ஒருவர் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிரதி இன்றுவரை பிரிக்கப்படாமல் புத்தம்புதியதாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஏலம் எடுக்கப் பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவர் ஒரு லட்சத்து 14ஆயிரம் டாலர்களுக்கு இதனை ஏலம் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேம் பிரதி என்ற சாதனையை இந்த சூப்பர் மேரியோ படைத்துள்ளது. இதற்கு முன்பும், சூப்பர் மேரியோ பிரதி ஒன்றே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதற்கான சாதனையைப் பெற்றிருந்தது. அந்த சூப்பர் மேரியோ கேம் ஒரு லட்சம் டாலர் மதிப்பில் ஏலம் விடப்பட்ட சூழலில், 1985 ஆம் ஆண்டின் இந்தப் பிரதி 1,14,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

Video game
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe