Skip to main content

ஏலத்தில் சாதனை படைத்த சூப்பர் மேரியோ...

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

super mario bros auctioned for a whooping price

 

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் மேரியோ கேம் பிரதி ஒன்று ரூ. 85 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 

 

90ஸ் கிட்ஸ்களின் மிகப்பிடித்தமான மற்றும் பிரபலமான கேம்களின் ஒன்று சூப்பர் மேரியோ. 3டி, வி.ஆர், ஏ.ஆர் என கேம்களின் பரிணாமம் மிகப்பெரிய வளர்ச்சியைத் தற்போது சந்தித்திருந்தாலும், சூப்பர் மேரியோ கேம் இன்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூப்பர் மேரியோ கேம் பிரதியை அமெரிக்காவில் ஒருவர் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிரதி இன்றுவரை பிரிக்கப்படாமல் புத்தம்புதியதாகவே வைக்கப்பட்டுள்ளது.

 

இதனை ஏலம் எடுக்கப் பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவர் ஒரு லட்சத்து 14ஆயிரம் டாலர்களுக்கு இதனை ஏலம் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேம் பிரதி என்ற சாதனையை இந்த சூப்பர் மேரியோ படைத்துள்ளது. இதற்கு முன்பும், சூப்பர் மேரியோ பிரதி ஒன்றே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதற்கான சாதனையைப் பெற்றிருந்தது. அந்த சூப்பர் மேரியோ கேம் ஒரு லட்சம் டாலர் மதிப்பில் ஏலம் விடப்பட்ட சூழலில், 1985 ஆம் ஆண்டின் இந்தப் பிரதி 1,14,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய பதிப்பில் GTA வீடியோ கேம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

GTA video game in new version trailer

 

கடந்த 1997 ஆம் ஆண்டு கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA) என்ற வீடியோ கேம்மை இங்கிலாந்தைச் சேர்ந்த ராக்ஸ்டார் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) என்பது வாகனங்களைத் திருடிச் செல்லும் கும்பலில் ஒருவராகப் பங்குபெற்று விளையாடும் ஒரு வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேம்மின் பதிப்பு ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்யப்பட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

 

இதுவரை கிராண்டு தெஃப்ட் ஆட்டோ V வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த பதிப்பு உலகத்தின் இரண்டாவது விற்பனையான கேம் என்ற பெருமையையும், 185 பில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட கேம் என்ற பெருமையையும் தக்க வைத்துள்ளது. 

 

இந்த நிலையில், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் பதிப்பை விட எந்த கேமும் ரசிகர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், மடிக்கணினி, லேப்டாப் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களில் விளையாடும் இந்த விளையாட்டு ஆன்ட்ராய்டு மொபைலிலும் விளையாடும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ராக்ஸ்டார் நிறுவனம் தொடங்கப்பட்டு அடுத்த மாதத்தோடு 25வது வருடத்தை எட்டவுள்ளது. ராக்ஸ்டாரின் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI கேம்மின் ட்ரையிலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தசாப்தங்களில் மிக முக்கியமான பொழுதுபோக்கு வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ கேம்மின் அடுத்த பதிப்பு வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்ததையடுத்து கிராண்ட தெஃப்ட் ஆட்டோ கேம்மின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

 

 

Next Story

கார் எடு, வேணும்னா சீட் போடு, மிஷன் முடுச்சுட்டு போய்ட்டே இரு... ஜி.டி.ஏ. (GTA)

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
GTA

 

ஜிடிஏ (G.T.A.) 90's கிட்ஸின் தவிர்க்கமுடியாத கேம். காட் ஆஃப் வார், பெய்ன், கிரிக்கெட், ஃபுட் பால் என பல கேம்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் கேம் வாழ்க்கையை, ஜி.டி.ஏ. இல்லாமல் எழுதமுடியாது. சீட்களுக்கென தனி ஜெராக்ஸ், பி.டி.எஃப்., இவை இல்லையென்றால் நோட்டில் எழுதிவைத்து அதை வைத்துக்கொள்வது என அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு விளையாடத் தொடங்கினால் அடி தொம்சம்தான்.


ஜிடிஏ ஆக்‌ஷன், அட்வெண்ட்சர் வகையைச் சேர்ந்த வீடியோ கேம். ஜிடிஏவின் முதல் வெர்சன் 21 அக்டோபர் 1997ல்தான் வெளியானது. ஜிடிஏவின் அடுத்தடுத்த வெர்ஷன்களில் பெரும்பாலானவை அக்டோபரில்தான் வெளியானது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) என்பதன் சுருக்கம்தான் ஜி.டி.ஏ. ஒரு கதை (story mode) போன்று இந்த கேம் நடக்கும், அதில் ஒரு கதாபாத்திரம்தான்  ப்ளேயர். அமெரிக்காவின் சில மாகாணங்களில் நடக்கும் இந்த கேம், டேவிட் ஜோன்ஸ், மைக் டெய்லி ஆகியோரால் உருவாக்கப்பட்டது, ராக் ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தால் டெவலப் செய்யப்படுகிறது. எவெர்க்ரீன் செல்லிங் வீடியோ கேம் அதாவது எப்போதும் மவுசு குறையாத கேம்களில் நான்காவது இடத்தில் ஜி.டி.ஏ. உள்ளது, அதுமட்டுமில்லை கேம் விமர்சகர்களால் ‘அடி தூள்’ என பாராட்டப்பட்டது இந்த கேம். ஜி.டி.ஏ. வெர்ஷன்களில் முக்கியமானது சேண்ட் ஆண்ட்ரெஸ் மற்றும் வைஸ் சிட்டி.
 

2004ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி மிக அதிக வரவேற்பு பெற்ற ஜி.டி.ஏ. சேண்ட் ஆண்ட்ரெஸ் (GTA san andreas) ப்ளே ஸ்டேஷன் 2 (playstation 2) வெர்ஷனில் வெளியானது. முன்பு வெளியான இரண்டு சீரிஸ்களின் சாயல்களிலேயே இருந்தாலும், புதுமையான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன. இது சிக்ஸ்த் ஜெனரேஷன் வீடியோ கேம் என அழைக்கப்பட்டது. மூன்றாம் நபரின் பார்வையில் (Third person view) விளையாடப்படும் இந்த கேம் மல்டி ப்ளேயர் ஆப்ஷன் கொண்டது. கார், பைக், சைக்கிள் முதல் குப்பை அள்ளும் இயந்திரம், அறுவடை இயந்திரம், ஹெலிகாப்டர், போட், ஸ்கை டைவ் பல வாகனங்கள் வெர்ஷனில் இருந்தது. இவைதவிர அவ்வப்போது வரும் கேங் வார், ரேஸ், போன்றவையும் சுவாரசியத்தை கூட்டும். இவைகளுக்கு நடுவே வரும் சிறு,சிறு மிஷன்கள் (mission) இப்படி பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் செல்லும் இந்த ஜி.டி.ஏ. சேண்ட் ஆண்ட்ரெஸ்.


 

gta




ஜிடிஏ சேண்ட் ஆண்ட்ரெஸ்க்கு முன்பு வந்தது வைஸ் சிட்டி (vice city) 29.10.2002ல் (GTA san andreas) ப்ளே ஸ்டேஷன் 2 (playstation 2) வெர்ஷனில் வெளியானது.  வழக்கமான அமெரிக்க கதைக் களத்தை கொண்டிருந்த இது, சிக்ஸ்த் ஜெனரேஷன் வகையைச் சேர்ந்தது. இந்த கேமில் நிறைய துப்பாக்கிகள், வாகனங்கள், முதல் மற்றும் மூன்றாம் நபரின் பார்வை ஆகியவை இருக்கும். குற்றங்கள் செய்வது, மாட்டிக்கொள்வது, கேங் ஃபைட், உதவி செய்வது, ரேஸ், என நிறைய மிஷன்கள் இருக்கும். இதுவும் அமெரிக்க தளத்தை அடிப்படையாக கொண்டது. மற்ற ஜிடிஏ வகைகளுக்கு சற்றும் குறையாத வகையில் பரபரப்பும், விறுவிறுப்பும் இருக்கும். 


மொத்தம் ஜிடிஏவில் 15 வெர்ஷன்கள் உள்ளன. இவைகளில் சில ஆண்ட்ராய்டு வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளன, பெரும்பாலனவை விண்டோஸ் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இன்றுவரை  மவுசு குறையாத, குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஆட்கொண்டிருக்கின்ற முக்கிய ப்ளே ஸ்டேஷன் கேமாக ஜி.டி.ஏ. இருக்கிறது.