style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங்போன்ற தனியார் ராக்கெட்நிறுவனங்கள் நாசா உடன் இணைந்து வணிக ரீதியான தனியார் விண்வெளி பயணங்களுக்கு முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதன் அடுத்தகட்டமாக அந்த திட்டத்தில் ராக்கெட்டுகளை இயக்க மற்றும் விண்வெளி பயணங்களை மேற்கொள்ள நாசா 9 விண்வெளி வீரர்களை அந்த நிறுவனங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. அந்த விண்வெளிவீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸும் இடம் பெற்றுள்ளார்.
52 வயதான சுனிதா வில்லியம்ஸ்ஏற்கனவே இரண்டு கட்டமாக விண்வெளியில் மொத்தம் 321 நாட்கள் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ஜோஸ் கசடா என்ற மற்றோரு விண்வெளி வீரரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவர் எனவும் நாசா அறிவித்துள்ளது.