கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். சுந்தர்பிச்சை கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தார்.இவர் பணியில் சேர்ந்த பிறகு கூகுளை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். தனது அபார உழைப்பால் கடந்த 2015-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

Advertisment

கடந்த 2017-ம் ஆண்டில் ஆல்பபெட் நிறுவனத்தில் இணைந்த அவர், அதன் தலைமை அதிகாரியாக இருந்தவர் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பொறுப்பையும் கூடுதலாக ஏற்றார். இந்நிலையில் சுந்தர் பிச்சை ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 2020- ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.