Advertisment

இலங்கையை அடுத்து வங்கதேசத்தில் குண்டு வெடிப்பு: உடல் சிதறி பலியான தீவிரவாதிகள்...

இலங்கை கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 390 பேர் கொல்லப்பட்ட நிலையில் இன்று வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகே முகமத்பூர் பகுதியில் தீவிரவாதிகள் இருவர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர்.

Advertisment

suicide attack in bangladesh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

முகமத்பூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற வங்கதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு ஒன்றை சுற்றி வளைத்து சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தியது.

Advertisment

சண்டையின் போது அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் திடீரென அங்கிருந்த இரண்டு தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் பொதுமக்களோ, ராணுவத்தினரோ உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Colombo srilanka Bangladesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe