சூடான் நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் மக்கள் சாப்பிட கூடிய ரொட்டியின் விலை 2 சூடானிஸ் பவுண்ட் அளவுக்கு விலை ஏற்றப்பட்டது. இதனை எதிர்த்தும் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையே எதிர்த்தும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தை அடக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. போராட்ட சம்பவங்களை தொடர்ந்து சூடான் நாட்டு அதிகாரிகள் பல நகரங்களில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த போராட்டங்களில் கடந்த 21ந்தேதி வரை 24 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் தகவல் துறை மந்திரி ஹசன் இப்ராகிம் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக போராட்ட நிலையை விசாரிக்கும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.