மருத்துவமனை மீது தாக்குதல்; 70 பேர் உயிரிழந்த சோகம்!

Sudan Elfasher Hospital incident

ஆப்ரிக்க நாடான சூடானை கடந்த 2021ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில் சூடானின் எல்ஃபஷர் நகரத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்த ஒரேயொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் நேற்று (26.01.2025) வெளியிட்டிருந்த பதிவில், “சூடானின் எல்-ஃபஷர் நகரத்தில் இயங்கி வரும் ஒரேயொரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் தகவல் தொடர்பு வசதிகளில் குறைபாடுகள் உள்ளன. இதனால் காரணமாக அந்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாவதில் சிக்கல் நிலவுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

hospital incident sudan Who
இதையும் படியுங்கள்
Subscribe