successfully completed space tourism; Accomplished Space X

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனியார் விண்வெளி பயணத்தைக் கடந்த 11ஆம் தேதி (11.09.2024) தொடங்கியது. இதற்காக பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற விண்வெளி விமானம் மூலம் பால்கன் 9 என்ற ராக்கெட்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ் மற்றும் அன்னா மேனன் ஆகிய 4 பேர் விண்வெளிக்குச் சென்றனர். இதனையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 4.22 மணிக்கு கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறிய ஜாரெட் ஐசக்மேன் என்பவர் முதல் நபராக விண்வெளியில் ஸ்பேஸ் வாக் (space walk) என்ற விண்வெளி நடை மேற்கொண்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ஜாரெட் ஐசக்மேன் உடன் மற்ற மூவரும் சேர்ந்து சுமார் ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் நடை மேற்கொண்டனர். இதன்மூலம் விண்வெளியில் நடை மேற்கொண்ட முதல் மனிதர் என்ற பெருமையை ஐசக்மேன் பெற்றிருக்கிறார். இது தொடர்பான காணொளிகள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த காணொளி உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

Advertisment

அதாவது போலரிஸ் டான் என்ற விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் தரையிறங்கியது. அதே சமயம் உலக விண்வெளி பயண வரலாற்றில் முதன்முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாதவர்கள் விண்வெளிக்குச் சென்று விண் நடை மேற்கொண்டது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சாமானிய பொதுமக்களும் விண்வெளிக்குச் செல்லலாம் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிரூபித்துக் காட்டியுள்ளது.

'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் எக்ஸ் என்ற சமூக வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார். அதோடு இவர் விண்வெளி துறை தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளையும், ரோபோக்கள் ஆகியவற்றையும் ஸ்பேஸ் நிறுவனம் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment