Advertisment

இரை என்று நினைத்து டவலை விழுங்கிய மலைப்பாம்பு!

ஆஸ்திரேலிய நாட்டில் இரை என்று நினைத்து பாம்பு ஒன்று துண்டை விழுங்கிய சம்பவம் அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் சேளியல் ஓ சல்லின். இவர் நான்கு மலைப்பாம்புகளை தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில், 5 கிலோ எடையும், 3 மீட்டர் நீளமுள்ள மோன்டி என்ற மலைப்பாம்பு இரை என்று நினைத்து காய வைக்கப்பட்டிருந்த டவலை விழுங்கியுள்ளது. இதைப்பார்த்த சல்லின், பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.

Advertisment

j

மருத்துவர்கள் பாம்புக்கு மயக்க மருந்து கொடுத்து ரேடியோகிராபி இயந்திரத்தை பாம்பின் வாய் வழியாக செலுத்தி டவல் இருக்கும் இடத்தை சரியாக கணித்தனர். பிறகு எண்டோஸ்கோப் உதவியுடன் டவலை பாம்பின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment
PYTHON
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe