Skip to main content

இரை என்று நினைத்து டவலை விழுங்கிய மலைப்பாம்பு!

Published on 28/02/2020 | Edited on 29/02/2020

ஆஸ்திரேலிய நாட்டில் இரை என்று நினைத்து பாம்பு ஒன்று துண்டை விழுங்கிய சம்பவம் அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் சேளியல் ஓ சல்லின். இவர் நான்கு மலைப்பாம்புகளை தன்னுடைய வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில், 5 கிலோ எடையும், 3 மீட்டர் நீளமுள்ள மோன்டி என்ற மலைப்பாம்பு இரை என்று நினைத்து காய வைக்கப்பட்டிருந்த டவலை விழுங்கியுள்ளது. இதைப்பார்த்த சல்லின், பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
 

j



மருத்துவர்கள் பாம்புக்கு மயக்க மருந்து கொடுத்து  ரேடியோகிராபி இயந்திரத்தை பாம்பின் வாய் வழியாக செலுத்தி டவல் இருக்கும் இடத்தை சரியாக கணித்தனர். பிறகு எண்டோஸ்கோப் உதவியுடன் டவலை பாம்பின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோழி கூண்டில் 15 அடி நீள மலைப்பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

 A 15-foot-long python in a chicken coop; The owner was shocked

 

கன்னியாகுமரியில் கோழி வளர்க்கும் கூண்டில் 15 அடி நீளம் மலை பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி அருகே பார்த்திபன் என்ற நபர் வீட்டின் முன்புறம் கூண்டு ஒன்றை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் கோழிகளுக்கு உணவளிக்க கோழி கூண்டை எதேச்சையாக திறக்க வந்தபொழுது, உள்ளே மலைப்பாம்பு ஒன்று இருந்தது. அதனைக் கண்டு அதிர்ந்த அவர் இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டைத் திறந்து உள்ளே இருந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். சுமார் 15 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

 

 

Next Story

பள்ளி பேருந்தில் மலைப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

Python on school bus... Shocking video

 

சில சமயங்களில் பள்ளி மாணவர்களின் காலணிகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் பதுங்கி இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகிய அதிர்ச்சி ஏற்படுத்தும். அண்மையில் புத்தகப் பையில் நாகபாம்பு ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளி பேருந்தின் எஞ்சின் பேனட் பகுதியில் மலை பாம்பு ஒன்று இருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேசம் மாநிலம் ரெயிட்பெரேலியில் விடுமுறையை முன்னிட்டு தனியார் பள்ளி பேருந்து ஒன்று வெகுநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் எஞ்சின் பேனட் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்தது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கயிறைக் கட்டி மலைப்பாம்பை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.