பலமுறை பயணம் ரத்து- நேரம் குறித்த நாசா 

 Subhanshu Shukla to fly into space tomorrow - NASA confirms timing

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கு ஆக்சியம்-4 பெயரிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய விமானப்படையின் கேப்டனாக இருப்பவரும், நேரடி இந்தியராகவும் உள்ள சுபான்ஷு சுக்லா செல்ல விண்வெளிக்கு செல்ல உள்ளார். இவர் பெங்களூரில் உள்ள விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருபவர் ஆவார். அதோடு ககன்யான் திட்டத்திற்காக ரஷ்யாவிற்குச் சென்று அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டவர் ஆவார். இது போன்று பல்வேறு திறமைகள் கொண்ட சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு இந்தியராக முதல்முறையாகப் பயணிக்க உள்ளார்.

பல்வேறு காரணங்களால் இந்த மாதம் நான்கு முறை உட்பட மொத்தம் இதுவரை ஆறு முறை ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதி கட்டமாக இந்திய நேரப்படி நாளை மதியம் 12:01 ஒரு மணிக்கு பால்கான் ராக்கெட் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் விண்வெளிக்கு செல்கின்றனர்.

இவர்கள் வருகிற 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தை நெருங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தோடு இவர்களுடைய விண்கலம் டாக்கிங் செய்யப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

NASA Rocket Space
இதையும் படியுங்கள்
Subscribe