style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கலிபோர்னியாவில் 250 அடிமலைச்சரிவில் வாகன விபத்தாகி பேரிடரில் சிக்கிய பெண் ஒருவர் ஏழு நாட்களாக காரின் ரேடியேட்டர் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற இளம்பெண் போலாந்திலிருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின்குறுக்கேகாட்டுவிலங்குகள்வந்ததால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார். அப்போது திடீரென்று கார் தடம்புரண்டு சுமார் 250 அடி பள்ளத்தில் கடல் பாறைகளுக்கு இடையேகார் கவிழ்ந்தது. ஆனால் இந்த சம்பவம் பற்றி அறியாத அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்து தேடிவந்தனர்.இந்த விபத்து நடந்து சுமார் 7 நாட்களுக்கு பிறகுஅந்த கடற்கரை வழியே நடந்து சென்ற சிலர் அங்கு கார் விபத்துக்குள்ளாகி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவலளித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ்விலா எலும்புகளில் பலத்தகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர். மேலும் 7 நாட்கள் அவர் உணவில்லமால்உயிருடன் இருந்தது ஆச்சிரியம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் கடந்த 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் வந்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.