Advertisment

வினோத உயிரினத்தால் அதிர்ந்த மக்கள் - விளக்கமளித்த அதிகாரிகள்!

ALLIGATOR GAR

Advertisment

சிங்கப்பூர் நாட்டின் மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் சிலநாட்களுக்கு முன்பு, ஒரு வினோதமான கடற்வாழ் உயிரினம் தென்பட்டது. கூரியபற்கள், பெரிய தாடைகளோடு இருந்தஅதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலில், அது முதலையாகஇருக்கும்எனநினைத்தமக்கள், அதன்அருகில் செல்லவே நடுங்கினர். இதனைத் தொடர்ந்து அந்த நீர்த்தேக்கத்தில் நகர நீர் நிறுவனத்தின் அதிகாரிகளும், தேசியப் பூங்காக்கள் வாரியஅதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.

இதில்அந்த உயிரினம் முதலை அல்லவென்றும், முதலைபோல் இருக்கும் மீன்வகையான முதலை மீன் வகையைச் சேர்ந்ததுஎன்றும் தெரியவந்தது. இந்த முதலை மீன், அந்தப் பகுதியில் வாழும் உயிரினம் அல்ல என்றும், 10,000மைல்களுக்குஅப்பால் இருந்து வந்திருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த முதலை மீனைவீட்டில்வளர்த்தவர்கள், பெரிய அளவில் வளர்த்ததால் அதனைநீரில்விட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மீன் வேட்டையாடி உண்ணும்தன்மைகொண்டது. எனவே இது அந்தப் பகுதியின் சுழலியலைப் பாதிக்கலாம்என்பதால், மேக்ரிச்சி நீர்த்தேக்கத்தில் இருந்து மாற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த முதலை மீன் உலகின்மிகவும் பழமையான உயிரினமாகும். இது சுமார்100 மில்லியன்ஆண்டுகளாக பூமியில்வாழ்ந்து வருகிறது.

reservoir singapore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe