ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினோத செய்திகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அப்படி அண்மையில் வைரலான ஒன்றுதான் பன்றி முகம் கொண்ட குழந்தை. கடந்த சில நாட்களாகவே பன்றி உருவம் கொண்ட ஒரு குழந்தை ஒரு பன்றியின் அருகில் பிறந்து கிடப்பது போன்றும் அந்த குழந்தையின் உருவம் பாதி மனித உருவத்தையும் முகம், கை நகங்கள், பற்கள்என மற்றவைபன்றியின் உருவத்தையும் ஒன்றடக்கிய ஒரு வினோத முகமாக இருந்தது.

Advertisment

PIG

இது சமூக வலைதளங்களில் வைரலாகி மனிதன் பன்றியுடன் உறவுகொண்டதால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என பல பல கருத்துக்களை நெட்டிசன்கள் பரப்பிவந்தனர். அதையும் தாண்டி சிலர் இது ஆஃப்ரிக்காவின் முரங்கா பகுதியில் நடந்த சம்பவம் என்றும் சிலர் இது இந்தியாவில் நடந்த சம்பவம் என்றும் போட்டு குழப்பிவந்தனர்.

PIG

Advertisment

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்தலைர மகனுக்கோ என்ற கலைஞர் ஒருவர் இது சிலிகான் பிளாஸ்டிக் ரப்பரால் செய்யப்பட்ட ரியாலிஸ்டிக்மாடல் பொம்மை எடசி ஸ்டோரி-யில் தற்போது இந்த பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ரியாலிட்டி பொம்மைகளை வைத்து எடுக்கப்படும் புகைப்படங்கள் உண்மை என பரவி வைரலாகி வருவது அதிகரித்துள்ளது சமூக வலைதளங்களில் என்பதே உண்மை.