Skip to main content

7 வருட போராட்டம்... குழந்தை போல மாறிய காதல் மனைவியை மீட்டெடுத்த கணவர்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

பிரசவத்தின்போது ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் மறதி நோய்க்கு ஆளாகி, குழந்தை போல மாறிப்போன தனது மனைவியை மீட்டெடுத்த கணவரின் வாழ்க்கை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

steve curto book "But I know I love you" about his wife

 

 

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஸ்டீவ் கர்டோ (steve curto), கேம்ரே (camre) தம்பதியினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார் ஸ்டீவ். பிரசவம் முடிந்து குழந்தை நலமுடன் உள்ளது என்ற செய்தி அவரது காதுகளுக்கு எட்டிய மறுகணமே, மனைவி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் அவரது காதுகளில் விழுந்தது.

பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தி நின்றுகொண்டிருந்த ஸ்டீவிடம், அனைத்தையும் மறந்திருந்த அவரது மனைவி மற்றொரு குழந்தையாக ஒப்படைக்கப்பட்டார். மற்றவர்களிடம் உரையாடுவது எப்படி, பல் தேய்ப்பது எப்படி, உடை அணிவது எப்படி என்ற அடிப்படை விஷயங்களை கூட மறந்திருந்த கேம்ரேவை தனது பச்சிளம் குழந்தையோடு சேர்த்து மற்றொரு குழந்தையாக வளர்க்க ஆரம்பித்தார் ஸ்டீவ். 7 ஆண்டுகால போராட்டம், தனது குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அனைத்தையும், தனது மனைவிக்கும் கற்றுக்கொடுத்து அவரை இன்று ஒரு சாதாரண மனிதராக மாற்றியுள்ளார் ஸ்டீவ். தனது வாழ்க்கை குறித்தும், தனது மனைவியுடனான காதல் குறித்தும் ஒரு புத்தகத்தை எழுதி தற்போது வெளியிட்டுள்ளார்.

 

steve curto book "But I know I love you" about his wife

 

அந்த புத்தகத்தில் தங்களது வாழ்க்கை குறித்து விவரித்துள்ள ஸ்டீவ், "நான் முதலில் கேம்ரேவைச் சந்தித்தபோது, ​முதல் பார்வையிலேயே ஒரு அழகிய காதல் ஏற்பட்டது. அந்த நாளை திரும்பிப் பார்க்கும்போது எனக்கு அழகான தருணங்கள் என் கண் முன்னே வந்து செல்கின்றன. ஆனால், பிரசவத்திற்கு பின் என் மனைவிக்கு அந்த நினைவுகள் இல்லாமல் போய்விட்டன. என் மனைவிக்கு நான் யார் என்று தெரியவில்லை. அதேபோல எங்கள் குழந்தையை பற்றியும் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நேரம் நான் முற்றிலும் உடைந்துபோயிருந்தேன். ஆனால் அதேநேரத்தில் நான் என் வாழ்க்கையில் அன்பின் தேவையை உணர்ந்தேன். அப்போதிலிருந்துதான், எங்கள் வாழ்வின் புதிய பயணம் ஒன்றை நாங்கள் தொடங்கினோம்.

35 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம். யாரென்று தெரியாத என்னை அவள் நம்ப ஆரம்பித்தாள். அப்போதும் அவள் என்னிடம் `நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னாள். அந்த வார்த்தைகள்தான் இன்றுவரை என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன. எங்கள் மகனின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளவே அவளுக்கு சுமார் 1 வருடம் ஆனது.

 

steve curto book "But I know I love you" about his wife

 

பக்கவாதம் காரணமாக 6 ஆண்டுகளில் சுமார் 400 முறை அவளுக்கு வலிப்பு ஏற்பட்டது. நீங்கள் விரும்பும் ஒருவர் உங்கள் கண் முன்னே நரக வேதனையை அனுபவிப்பதைப் பார்ப்பது கடினம். ஆனால், நான் 6 ஆண்டுகளாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால் எதிர்காலம் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துளோம். தாய்மை என்றால் என்ன என்றே  தெரியாமல் இருந்த கேம்ரே தற்போது ஒரு சிறந்த தாயாக மாறியுள்ளார் " என கூறியுள்ளார். அவரது மனைவி கூறிய "ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்" என பொருள்படும் "But I know I love you" என்பதையே தனது புத்தகத்தின் தலைப்பாக வைத்து இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.