இலங்கையில் நாடாளுமன்றம் வருகின்ற 14ஆம் தேதி கூடும் என்று அறிவித்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்19ஆம் துவங்கி நவம் 26 வரை மனுத்தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளான, யு.என்.பி., தமிழ் தேசிய கூட்டணி, ஜே.வி.பி., எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 10 கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் மீது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

Advertisment

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவ.19ம் தேதி வரை இந்த கலைப்புக்குதடை விதித்துள்ளது. அதேபோல,ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தடை, இலங்கை நாடாளுமன்றம் நவம்பர்14ம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை இல்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.