சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் உயிரிழப்பு... ஈரானில் சோகம்...

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

stampede in soleimani funeral

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட சுலைமானின் உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டுவரப்பட்டு டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அவரது இந்த இறுதி ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் டெஹ்ரான் நகரில் கூடினர். அனைவரும் கறுப்பு நிற உடையில் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். டெஹ்ரான் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 48 பேர் இந்த இறுதி ஊர்வலத்தில் காயமடைந்தனர். சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

America iran
இதையும் படியுங்கள்
Subscribe