Advertisment

மொகரம் பேரணியில் விபரீதம்... 31 பேர் பலியான பரிதாபம்... 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...

மொகரம் பண்டிகையையொட்டி நடைபெற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் ஈராக் நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

stampede at iraq muhharam

ஈராக் நாட்டில் கர்பாலா நகரில் நேற்று நடந்த மொகரம் பேரணியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் இந்த தினத்தில் கர்பாலா நகரில் மிகப்பெரிய பேரணி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனர். அவ்வாறு நேற்று நிகழ்ந்த இந்த பேரணியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Islam iraq
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe