Skip to main content

தத்தளிக்கும் ஆஸ்திரேலியா... காலநிலை மாற்றமே மோசமான விளைவுகளுக்கு காரணம் என அச்சம்!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Staggering Australia ... Fear that climate change is the cause of bad effects!

 

காட்டுத் தீ, சூறாவளியைத் தொடர்ந்து தற்போது பெருமழை ஆஸ்திரேலியாவை நிலைக்குலையச் செய்து வருகிறது. இந்த பெருவெள்ளம் காலநிலை மாற்றத்தை உணர வேண்டியதன் அபாய மணி என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

 

குடியிருப்புகளை மூழ்கடிக்கும் வெள்ளம்; மின்சாரம் இல்லை.  உயரமான இடங்களைத் தேடி செல்லும் மக்கள் என ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியை கனமழை புரட்டிப் போட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, குயின்ஸ்லாந்து, நியூ சவுத்வேல்ஸ் மாகாணங்களில் அதிகனமழை கொட்டி வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது. 

 

மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியை அரசு முடுக்கிவிட்டாலும், அவற்றைத் தொடர வெள்ளநீர் வடியும் வரை, காத்திருக்க வேண்டும். வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

 

காலநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருப்பதாக, அவர்கள் கவலைப்படுகின்றன. வெப்பநிலை உயர்வில் உலக சராசரியை விட, ஆஸ்திரேலியாவின் வெப்பநிலை உயர்வு அதிகரித்துள்ளது. அதனால் காட்டுத் தீ, வறட்சி, சூறாவளி, மழைப்பொழிவு எல்லாம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

 

கோடைக்காலங்களில் கூட திடீரென கொட்டும் மழையால், நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. இதற்கு மேலும் புவி வெப்ப மயமாதலைத் தடுத்து, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தவறினால், மனிதகுலம் மிகப்பெரிய அபாயத்தில் சிக்கிவிடும் என்று கலக்கத்தோடு கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.