இலங்கையில் அமலில் இருந்த அவசர நிலைப் பிரகடனத்தைத் திரும்ப பெறுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Srilanka

இலங்கையில் சிங்கள இனத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் இடையே இனக்கலவரம் உருவானது. இந்தக் கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியர்கள் வாழும் பகுதி, அவர்களின் கடைகள் மற்றும் மசூதிகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து, அந்நாட்டில் கடந்த மார்ச் 6ஆம் தேதி அவசர நிலைப் பிரகடனத்தை அறிவித்தது இலங்கை அரசு.

இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதனால் அவசர நிலைப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுவதாகவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.

Advertisment

அங்கு சமூக வலைத்தளங்களின் மூலமாக கிளர்ச்சி உருவாகும் சூழல் இருந்ததால், முகநூல் போன்றவை முடக்கப்பட்டன. இனி அதுபோன்ற பதிவுகள் தொடராது என முகநூல் தரப்பில் இருந்து வாக்குறுதி அளித்தபின், அதையும் அந்நாட்டு அரசு வாபஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.