Advertisment

இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- இலங்கை முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

இலங்கையின் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள் தான் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

srilankan former minister blames rajapakse for colombo serial blast

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈஸ்டர் அன்று தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத்தை போன்று பல்வேறு இஸ்லாமிய குழுக்களை ​கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சேவுமே உருவாக்கினர். தமிழ், முஸ்லீம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே இவ்வாறான குழுக்களை அவர்கள் உருவாக்கினர். சிங்கள பௌத்த நாடான இலங்கையை மாற்றியமைக்க யாராவது முயற்சி செய்தால், இனப்படுகொலை செய்தாவது நாட்டை பாதுகாக்க தயங்க மாட்டேன்" என அவர் கூறினார்.

Advertisment

mahinda rajapaksa Colombo srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe