Skip to main content

அன்று பிரதமர் இன்று சபாநாயகர்... இலங்கை அரசியலில் தொடரும் அதிரடி மாற்றங்கள்

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபக்சே காட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தனே பொறுப்பேற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார்.

 

kk

 

 

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் எனவும். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

'ராஜபக்சே சகோதரர்களே காரணம்' - இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Rajapakse brothers are responsible'-Sri Lankan Supreme Court verdict

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

 

உலக அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக நாடுகள் ஒவ்வொன்றாக மீண்டு எழுந்து வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இலங்கையில் மட்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களே போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவானது.

 

இது உலக அளவில் கவனம் பெறும் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வெடித்தது. அமைச்சர்களின் வீடுகள், அதிகாரிகளின் வீடுகள் மக்களாலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறைகளும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிகழ்வுகளும் நடந்திருந்தது.

 

இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு எதிராகத் தனியார் அமைப்பு ஒன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் உள்ளிட்டோரின் தவறான  நடவடிக்கைகள், அலட்சியம்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

 

Next Story

அதிபர் ரணில் கேள்விக்கு முதல்வர் மம்தா அளித்த பதில்! - வைரலாகும் வீடியோ

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Chief Minister Mamata's answer to President Ranil's question! A viral video

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 12 நாள் அரசுமுறைப் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 23 வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஸ்பெயினில், மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கும் பயணப்பட்டு தொடர்ச்சியான வணிகக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-22 தேதிகளில் கொல்கத்தாவில் 7வது வங்காள உலக வணிக உச்சி மாநாடும் (பிஜிபிஎஸ்) நடக்கவிருக்கிறது.

 

இந்த நிலையில், மம்தா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தற்செயலாக சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

இது குறித்து ட்விட்டரில் மம்தா பானர்ஜி, “இலங்கையின் திறன்மிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் என்னை சந்தித்தார். அப்போது என்னிடம் சில கலந்தாய்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். அவர் அழைப்பு விடுத்தது என்னை நெகிழ வைத்தது. மேலும், கொல்கத்தாவில் நடைபெறும் 'பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2023' இல் பங்குபெற அவரை அழைத்தேன். தொடர்ந்து அவர், என்னை இலங்கைக்கு பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் இனிமையாகவும் அதேசமயம் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டிருக்கிறார்.