srilanka

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு நேற்று இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதேபோல இன்று அவை கூடும் என்பதற்கு மட்டும் தடை விதிக்காமல் இருந்திருந்தது.

இன்று இலங்கையில் நாடாளுமன்றம் கூடிய நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனதா விமுக்தி பெரமுன கட்சி கொண்டுவந்தது.

Advertisment

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவிப்பு. இதனை தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் நாளை காலை 10 மணி வரைக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கொண்டுவந்ததும் ராஜபக்சே இதை ஏற்றுக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.