இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் சர்வதேச அளவில் "ஷாங்ரிலா ஹோட்டல் " என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வெளிநாட்டினர் மற்றும் சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

video

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அவர்களை குறி வைத்து அந்த ஹோட்டலில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தது. இந்த நிலையில் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ இலங்கை உள்ளூர் சேனல்களில் வெளியாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சரியாக ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் காட்சிகள் அமைந்துள்ளனர். அந்த நட்சத்திர ஹோட்டலில் தலையில் ஊதா நிறத் தொப்பியுடன் ஒருவர் சந்தேகப்படும் படி நடந்து செல்கிறார். அவர் தான் தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளனர்.

video

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நிகோம்போவில் நடந்த இந்த சம்பவத்தில் பேக் அணிந்த ஒருவர் சந்தேகப்படும் படியாக நடந்து சென்றார். இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு இந்திய உளவுத்துறை மற்றும் தமிழக உளவுத்துறை இலங்கை அரசை எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உளவுத்துறை அறிக்கையை இலங்கை அரசு அலட்சியமாக கருதியதால் தான் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை மக்களிடம் அதிபர் மற்றும் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கேட்டது. இதன் தொடர்ச்சியாக இலங்கை முப்படை தளபதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொடர் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பி.சந்தோஷ், சேலம்.